மறு அறிவித்தல்வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் – இராணுவத்தளபதி அறிவிப்பு!

Wednesday, July 21st, 2021

மறு அறிவிப்பு வரும்வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை எளிதாக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 10 அன்று, சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார்.

அந்த வகையில், ஜூலை 14முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி அத்தியாவசிய கடமைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டன.

இருப்பினும், இந்த முடிவு எடுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் ஓகஸ்ட் 01 வரை நிறுத்தப்பட்டன.

இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் ஓகஸ்ட் 1 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் இயங்கும் என்றாலும், மறு அறிவிப்பு வரும் வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத்தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: