இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு பல துறைகளில் ஆதரவு – ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் உறுதியளிப்பு!

Tuesday, September 13th, 2022

இலங்கை எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க பல துறைகளில் ஆதரவை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரி கெனிச்சி யோகோயாம இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் வழங்கக்கூடிய பல துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. .

ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பை அடையக்கூடிய பல பகுதிகள் தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: