மருந்தாளர்கள் இல்லாமல் இயங்கும் மருந்தகங்கள் மீது சட்ட நடவடிக்கை!

Thursday, January 17th, 2019

யாழ். மாவட்டத்தில் மருந்தாளர்கள் இல்லாமல் இயங்கும் மருந்தகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். மாவட்டத்திலுள்ள பல மருந்தகங்கள் மருந்தாளர்கள் இன்றி இயங்குகின்றன.

இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பல மருந்தகங்களில் மருந்தாளர்கள் இருப்பதில்லை. மருந்துகளின் விபரங்கள் தெரியாதவர்கள் கூட மருந்தகங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

மருத்துவரின் மருந்துச் சிட்டை இன்றி பல மருந்தகங்களில் மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றும் இதனால் குறிப்பாக மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

போதையூட்டும் மருந்துகளை மாணவர்கள், இளைஞர்கள் வாங்கிப் பயன்படுத்தும் புதிய செயற்பாடு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதற்கு மருந்தகங்களும் ஒரு காரணமாக உள்ளன.

எனவே இதுதொடர்பில் சுகாதாரப் பிரிவினர் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் எனவும் உணவு மருந்து பரிசோதகர் அடிக்கடி சென்று மருந்தகங்களைப் பார்வையிட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: