மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கு பொலிஸ் நற்சான்றிதழ் அவசியம்!

Tuesday, January 16th, 2018

வேலைவாய்ப்புக்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய், சாஜா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் நாட்டின் பொலிஸ் நற்சான்றிதழைக்கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முதல் இச்சட்டம் அமுலுக்கு வருவதாகவும் இது சுற்றுலாப் பயணிகளுக்கு விதிவிலக்கு எனவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம்அறிவித்துள்ளது.

இச்சட்டம் தமது நாட்டுக்குள் வருபவர்கள் தாய் நாட்டில் குற்றமற்றவராக இருக்க வேண்டும் என்பதற்காகவே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: