பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டுவாருங்கள் – அமெரிக்கா!

Wednesday, March 7th, 2018

தற்போது இலங்கையில் நிலவும் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர்பில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளதுடன் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைசுதந்திரங்களை பாதுகாத்து அவசரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு அறிவுரைவிடுத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இது தொடர்பான அறிக்கை ஒன்றினை விடுத்து குறிப்பிட்டுள்ளது.

“நாட்டின் அமைதியான வாழ்வுக்கு சட்ட ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் ஆகியன அத்தியாவசியமாகும்.

மதம் சார்பான பிரிவினைவாத வன்முறை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் மத ரீதியான சிறுபான்மையினரையும் அவர்களது வழிபாட்டுதலங்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாக்கும் அதேநேரம், நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலையைவிரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டியது முக்கியமாகும்” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: