மதங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்த பாடுபடுகின்றோம் –  பிரதமர்!

Saturday, June 24th, 2017

பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்த அரசாங்கம் பாடுபடுகிறதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் சமீபகாலங்களில் வெள்ளப் பாதிப்பை கருத்திற்கொண்டு, சில முஸ்லிம்கள் இப்தார் நோன்பு துறக்கும் வைபவத்திற்காக பணம் செலவழிப்பதை தவிர்த்தார்கள். அந்தப் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கினார்கள். இவை சிங்கள மக்கள் கூடுதலாக வசிக்கும் கிராமங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதென்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்

Related posts: