தெங்கு உற்பத்தித்துறையை மேம்படுத்த நடவடிக்கை!

Saturday, January 13th, 2018

தெங்கு உற்பத்திக்கான திட்டம் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல 2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டை இலக்காக கொண்டுநடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெங்கு உற்பத்தி சபை தெரிவித்துள்ளது.

தெங்கு உற்பத்தி அறுவடையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தெங்கு முக்கோணப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்படும்என்றும் தெங்கு உற்பத்தி சபையின் உதவி முகாமையாளர் டபிள்யூ.ஏ.எச்.சேனாரத்தன தெரிவித்துள்ளார்.

2 வருடங்களுக்கு மேலாக நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வருடாந்தம் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கு மேலாக பெற்றுக்கொள்ளப்பட்ட தெங்குஅறுவடை தற்போது 2 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவாக குறைவடைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: