மக்களின் எழுச்சியில் வெற்றியைப் படைப்போம் – மானிப்பாயில் ஈ.பி.டி.பி உறுதிமொழி!

Saturday, March 25th, 2017

மக்களின் எழுச்சியின்மூலம் அரசியல் மாற்றத்தை உருவாக்கி தமிழ்  பேசும் மக்களின் உரிமைகளை அடையும் பாதையில் வெற்றியைப் படைப்போம்  என வலி தென்மேற்கு பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் பிரதேச நிர்வாகம் மற்றும் போதுச்சபையினருடனான சந்திப்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இன்றையதினம் (25) கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சனின் ஒருங்கிணைப்பில் மானிப்பாயிலுள்ள அலுவலகத்தில்  கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தலைமையில்  குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது அங்கு ஒன்றுகூடிய கட்சியின் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட கலந்துரையாடிலின் இறுதியில் இவ்வாறு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்,  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், ஆகியோர் உடனிருந்தனர்.

17547623_1356728244366259_651788548_o

Related posts: