குறைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிவரும் – காற்று மாசுபடல் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் எச்சரிக்கை!

Thursday, December 15th, 2022

இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக காற்று மாசடைந்துள்ளமை குறித்து அண்மைய காலங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

எனினும், நாம் அன்றாடம் வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலைமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: