மாணவர்கள் ஒன்று கூடியதால் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு!

Friday, September 25th, 2020

யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும்  பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடான  சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

யாழ் பல்கலைகழக நுழைவாயிலில் கறுப்பு உடைகளுடன் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு, பொலிஸார் அறிவுறுத்தயுள்ளனர். எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, பெருமளவு  பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பல்கலைகழகத்தில் மாணவர்கள்  திலீபனுக்கு அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் பொலிஸார் பல்கலைகழக நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் கறுப்பு உடையணிந்த மாணவர்கள் இன்று பகல் பல்கலைகழக நுழைவாயிலில் ஒன்றுகூடியிருந்தனர். இதன்போது அங்கு குவிந்த பொலிஸார் மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு பணித்துள்ளனர்.

எனினும், மாணவர்கள் அதை நிராகரித்தனர். இதனால், மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் உதவிக்கு இராணுவத்தினரும்  அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மாநகரசபையிடம் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் விசேட செயற்றிட்டம் கிடையாது - சுட்டிக்காட்டுகிறார் யா...
பரீட்சைகளை பிற்போடுவது தொடர்பில் எதுவித தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை - கல்வி அமைச்சு !
ஜனவரி மாதம்முதல் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவ...