கொரேனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, July 28th, 2022

நாட்டில் கொரேனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் நாட்டின் அநேக வைத்தியசாலைகளில் தற்போது இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் மரணங்களின் எண்ணிக்கை உயர்வடையும் சாத்தியங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார வழிகாட்டல்களை சரியான முறையில் மக்கள் பின்பற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்டிஜன் பரிசோதனை நடாத்த போதியளவு வசதி இல்லாத காரணத்தினால் அடையாளம் காணப்படும் நோய்த் தொற்று உறுதியாளர்களின் எண்ணிக்கையிலும் ஐந்து மடங்கு அதிகளவில் நோய்த் தொற்றாளர்கள் நாட்டில் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளினால் கோவிட்டை கட்டுப்படுத்தும் பொறுப்புக்களை சுகாதார தரப்பினர் ஏற்றுக்கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: