அரச பேருந்துகளுக்கும் இணையத்தளம் ஊடாக ஆசன முன்பதிவு செய்யலாம் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தகவல்!
Thursday, March 16th, 2023
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் நீண்ட தூர பயணங்களுக்காக இணையத்தளம் வாயிலாக ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.
அத்துடன், sltb.express.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் வாயிலாக நெடுந்தூர பயணங்களுக்கான ஆசன முன்பதிவினை மேற்கொள்ள முடியும்.
1315 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் வாயிலாகவும் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சோபா ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தம் !
பேருந்து கட்டணத்தில் மாற்றத்தை கொண்டுவர எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டது - போக்குவரத்...
20 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் புதிய வர்த்தமானி - அமைச்சருமான விமல் வீரவன்ச!
|
|
|


