இலங்கை – இந்தியரு இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை !

Wednesday, February 21st, 2024

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகக்கூடிய இயலுமையை அதிகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், மேம்படுத்தப்பட்ட தொடர்புகள் மூலம் கலாசார பரிமாற்றங்கள், கல்வி, சமய, கலாச்சார செயற்பாடுகள், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதற்கும் இதன் ஊடாக இயலுமை உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக குறைந்த செலவிலான சுற்றுலா மற்றும் போக்குவரத்துக் கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய பயணிகள் போக்குவரத்துப் படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து தற்போது அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரி முறையே 5 அமெரிக்க டொலர்கள் மற்றும் 20 அமெரிக்க டொலர்களாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், படகுப் பயணி ஒருவருக்கு 60 கிலோகிராம் வரையான பயணப் பொதிக் கட்டணத்தை இலவசமாக வழங்குவதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30 வீதத்தால் குறைந்துள்ளது - தம்புள்ளை மொத்த வியாபாரிகள் சங்கம் ...
வடக்கில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரிப்பு - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பண...
இந்திய பெருங்கடல் பகுதியில் வெவ்வேறான இரு காற்று சுழற்சிகள் - வடக்கு கிழக்கில் கனமழை பெய்ய வாய்ப்பள்...