ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, July 3rd, 2023


தொடர்ச்சியாக நட்டமடைந்து வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது என்றும் மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைவில் மறுசீரமைக்க தவறினால், 6 ஆயிரம் பேர் தொழிலை இழக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்கு சர்வதேச நிதி செயற்பாடுகள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாளும் விமானங்களைக் கண்டிராத, விமானங்களில் காலடி வைக்க முடியாமல் இருக்கும் சாதாரண மக்களின் பணத்தினாலேயே இந்த சேவைகள் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

எமக்கென தனியொரு விமான சேவை இருப்பது பெருமைக்குரியதாக இருந்தாலும், அதனை நடத்திச் செல்வதற்கான செலவு மிக அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது

Related posts:


பிரதேசங்களினது அபிவிருத்திக்காக உழைக்க இளைஞர்கள் அணிதிரள வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வ...
வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13,14ஆம் திகதிகளில் இடம்பெறும் - தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அறிவ...
யாழ்ப்பாணத்தில் கடும் வரட்சி: ஊரடங்கு நடைமுறையிலுள்ள போதிலும் செவ்விளநீரின் நுகர்வு அதிபரிப்பு – விய...