போக்குவரத்துச் சேவை சீராக நடத்துமாறு மக்கள் கோரிக்கை!

Wednesday, May 15th, 2019

பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வரைக்கும் பயணிகள் பேருந்து சேவையினை மேற்கொள்ளும் இலங்கை போக்குவரத்துச்சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மிகப்பழமையானதாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை தொடக்கம் கேவில் வரைக்குமாக காலை முதல் சேவையில் ஈடுபடுவது இலங்கை போக்குவரத்துச்சபைக்குச் சொந்தமான பேருந்தே ஆகும். வடமராட்சி கிழக்கில் இருந்து பாடசாலை மாணவர்கள், அரச, தனியார் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் மற்றும் பல தேவைக்காகச் செல்வோர் இப் பேருந்தையே பயன்படுத்துகின்றனர். இந்தப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி இடைநடுவில் நிற்பதாக மக்கள் குறை கூறுகின்றனர். இதே போன்றே மாலையிலும் கடைசியாக வடமராட்சி கிழக்கிற்கு வரும் பயணிகளின் பேருந்து இதுவாகவே இருக்கின்றது.

எனவே இந்தப் பேருந்துப்பயணத்தில் ஈடுபடும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க சாலைக்குப் பொறுப்பானவர்கள் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பழுதடைவது கிழமைக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: