பாதுகாப்பு அமைச்சின் கீழ் 6 நிறுவனங்களை கொண்டு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Tuesday, May 26th, 2020

தேசிய பொலிஸ் கல்லூரி, அபே வெனுவென் அபே நிதியம் உட்பட்ட 6 நிறுவனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அபே வெனுவென் அபே நிதியம் பாதுகாப்பு அமைச்சும் மத்திய வங்கியும் இணைந்து படையினருக்காக 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்காக ஏற்படுத்தப்பட்டது.

இது இதுவரை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இருந்து வந்தது. தற்போது இது தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் நிதியியல் கற்கை கல்லூரி, வர்த்தகத்துறை அமைச்சின் கீழ் இருந்த இரசாயன ஆயுத மாநாட்டு நடைமுறை தேசிய அதிகாரசபை, இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி, பல்துறை அபிவிருத்தி செயலணி திணைக்களம் ஆகியனவும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதில் பல்துறை அபிவிருத்தி செயலணித் திணைக்களம் வறுமை ஒழிப்பு திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் திணைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: