யாழ்ப்பாணத்தில் கைதாவோரை கொழும்பில் முற்படுத்துவதேன், எதிராக உறவினர் வழக்குத் தொடரலாம் என்கிறார் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி!

Wednesday, November 23rd, 2016

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண நீதிமன்றில் முற்படுத்தாமல் எதற்காகக் கொழும்பு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலை காணப்படுகிறது ஆனால் பொதுமக்கள் வழக்குத் தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்று யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறி 70பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 9 நீதிமன்றங்களும் மேல் நீதிமன்றமும் காணப்படுகின்றன. அவ்வாறிருந்தும் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு மன்றின் உத்தரவுப்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இங்கு உள்ள நீதிமன்றங்களில் முற்படுத்த முடியாதா? இந்த வழக்குகளை யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றங்களில் நடத்த முடியாதா என்ற பொதுமக்களின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்;. யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்படுவர்களை வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்வது அரசியல் சாசனச் சட்டத்தை மீறிய செயற்பாடாகும்.

ilancheziyan

Related posts: