பொலிஸ் உத்தியோகத்தர்களது சீருடையில் கமரா பொருத்த புதிய யோசனை!
Tuesday, November 15th, 2016
பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் சீருடையில் குரல்களையும் காட்சிகளையும் பதிவு செய்யக் கூடிய வகையில் கமரா பொருத்துவது குறித்து யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றும், நேற்று முன்தினமும் ஹம்பாந்தோட்டை ஷங்கரீலா ஹோட்டலில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் குறித்த யோசனை முன்வைக்கப் பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வரையறுக்கும் நோக்கில், சீருடையில் கமராக்களை பொருத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த செயலமர்வில் வரவு செலவுத் திட்ட யோசனையை அமுல்படுத்த சில குழுக்கள் நியமிப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts:
பிரதமர் இந்தியா விஜயம்!
இலங்கையில் மின்சார உற்பத்தி வீழ்ச்சி - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!
இரண்டாம் கட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி கைச்சாத்து!
|
|
|


