பொதுமக்கள் பார்வைக்குவரும் கொழும்பு துறைமுகம்!

Tuesday, June 19th, 2018

கொழும்பு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறக்குமாறு ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு துறைமுகம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் தற்போது அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் சொத்து என்ற வகையில் கொழும்பு துறைமுகத்தை திறக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தின் இதயம் என கருதப்படும் கொழும்பு துறைமுகம் இந்த வருடம் 13.2 பில்லியன் ரூபா வருவாய் ஈட்டியுள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்து வருகிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: