ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் இராஜினாமா!

Thursday, November 22nd, 2018

ஐக்கிய நாடுகள் நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹிம் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த எரிக் சோல்ஹிம் தனது அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக 5 லட்சம் அமெரிக்க டாலர்கள்செலவிட்டது, அந்த அமைப்பின் தணிக்கையில் கண்டறியப்பட்டது. மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எரிக், தனது செயல்கள் அனைத்தும் சுற்றுச்சுழல் நலனுக்காகவே இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது இராஜினாமாவை ஐ.நா பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டதாக ஐநா செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: