வேட்பு மனு தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவித்தல்!

Wednesday, March 4th, 2020

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துதல் மற்றும் வேட்பு மனுக்களை கையளிக்கும் இடம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 22 வேட்பாளர்களை வேட்புமனு பட்டியலில் உள்வாங்க முடியும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 15 வேட்பாளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்கள் தெரிவிற்காக 11 வேட்பாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்வற்காக 8 வேட்பாளர்களை வேட்புமனு பட்டியலில் உள்ளீர்க்க முடியும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 உறுப்பினர்கள் தெரிவிற்காக 10 வேட்பாளர்களும், வன்னி மாவட்டத்தில் 6 உறுப்பினர்கள் தெரிவிற்காக 9 வேட்பாளர்களும், மட்டக்களப்பில் 5 உறுப்பினர்கள் தெரிவிற்காக 8 வேட்பாளர்களும் போட்டியிட முடியும்.

இதேநேரம், திகாமடுல்லையில் 7 உறுப்பினர்கள் தெரிவிற்காக 10 வேட்பாளர்களும், திருகோணமலையில் 4 உறுப்பினர்கள் தெரிவிற்காக 7 வேட்பாளர்களும் வேட்புமனு பட்டியலில் உள்ளீர்க்க முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: