பெலியத்தை – காங்கேசன்துறை இடையே தினசரி புகையிரத சேவை!

Thursday, April 18th, 2019

பெலியத்த – காங்கேசன்துறைக்கிடையில் தினசரி புகையிரத சேவையொன்றை ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு தேவையான சகல உபகரணத் தொகுதிகளும் இந்த மாத இறுதிக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் குறித்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மாத்தறை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த தெற்குக்கான புகையிரத சேவை கடந்த 6ஆம் திகதி பெலியத்த வரை நீடிக்கப்பட்டிருந்தது.

தற்போது வார இறுதியில் மாத்திரம் பெலியத்த – காங்கேசன்துறை வரை பயணிக்கும் புகையிரத சேவை எதிர்வரும் நாட்களில் தினசரி சேவையாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: