அத்துமீறி மீன்பிடிக்கும் கப்பல்கள் மீது இனிமேல் பல மில்லியன் ரூபா தண்டம் -அமைச்சர் மகிந்த அமரவீர!

Monday, November 28th, 2016

கடல் வளங்களை பாதுகாக்கும் நோக்குடன், இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு 175 மில்லியன் ரூபா வரை தண்டம் விதிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்ததாவது:

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு அதிகூடிய தண்டப்பணத்தை விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கடல் வளங்களை சூறையாடியமைக்கு 3மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரை தண்டமும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறியமைக்காக 5மில்லியன் ரூபா முதல் 175 மில்லியன் ரூபா வரையும் தண்டம் விதிக்கப்படும். கடற்படையினரால் கைப்பற்றப்படும் கப்பலை விடுவிக்க நீதிமன்றில் முற்படும் கப்பல் உரிமையாளர் தண்டத் தொகையை செலுத்தவேண்டும். தற்போது இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களுக்கு குடிவரவுச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படுகிறது. புதிய சட்டத்தின் பிரகாரம் அத்துமீறும் மீனவர் மற்றும் கப்பலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் கடற்தொழில் திணைக்களத்துக்கு வழங்கப்படும் என்றார்.

AJ

Related posts: