சேதனப் பசளைப் புரட்சி திட்டம் எக்காரணம் கொண்டும் பின்வாங்கப்பட மாட்டாது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உறுதி!

Sunday, July 11th, 2021

நஞ்சற்ற உணவை நாட்டு மக்களுக்கு பொற்றுக்கொடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சேதனப் பசளைப் புரட்சி திட்டம் எக்காரணம் கொண்டும் பின்வாங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் கொள்கைக்கு அமைவான சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தினூடாக நாட்டில் இரசாயன பசளைப் பயன்பாட்டை இரத்து செய்து சேதனப் பசளை பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில்  மக்கள் நலன் மிக்க திட்டம் எவருக்காகவும் மாற்றப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த புதிய புரட்சிக்கு முட்டுக்கட்டைகளை போட சில தரப்பினர் முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் இரசாயன பசளைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சில இணைய தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதன் மூலம் இலாபமீட்டிய தரப்புக்கள் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச  எக்காரணம் கொண்டும் குறித்த புரட்சித் திட்டம் கைவிடப்பட மாவட்டாது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: