யாழ்ப்பாணத்தில் ரூ.400 மில்லியன் செலவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு!
Friday, July 22nd, 2016
யாழ்ப்பாணத்தில் ரூ. 400 மில்லியன் செலவில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை யாழ்ப்பாணத்தில் கட்ட திட்டமிட்டுள்ளோம் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் நவம்பர் மாதம் தொடங்கும்.
3 ஆண்டுகளில் இந்த பணிகள் முழுவதுமாக முடிந்துவிடும். இருப்பினும் இது கட்டப்படும் இடம் இன்னும் தெளிவாக முடிவு செய்யப்படவில்லை. இதற்கான மொத்த செலவையும் கிரிக்கெட் வாரியம் ஏற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதல் பதக்கம்!
அரச உத்தியோகத்தர்கள் றக்பி வீரர்கள் போல செயற்பட வேண்டும் – வடக்கின் ஆளுநர்!
இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000 வீதமாக அதிகரிப்பு - பேராசிரியர் நிலீகா மலவிகே சுட்டிக்க...
|
|
|


