ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கையை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி!

Wednesday, February 23rd, 2022

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்கு சபாநாயகர் இன்று அனுமதியளித்துள்ளார்.

குறித்த அறிக்கையை இன்று புதன்கிழமை சபையில் முன்வைத்து உரையாற்றிய சபாநாயகர் சாட்சியங்களுக்கமைய தயாரிக்கப்பட்ட 88 அத்தியாயங்களுடன் கூடிய அறிக்கையை  நாடாளுமன்ற வாசிகசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நேற்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியப் பதிவுகள் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் 88 அத்தியாயங்களை உள்ளடக்கிய முழுமையான அறிக்கை நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: