யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் திறந்துவைப்பு!

Friday, September 16th, 2022

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான நிலையம் இன்று(15) காலை 9.30 மணியளவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்  சி.சிறிசற்குணராஜாவினால் திறந்து வைக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் சம வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களின் எதிர்பார்ப்புகளினை பூர்த்தி செய்வதற்காகவும், இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவில் கலைப் பீடாதிபதி சுதாகர், வாழ்வக இயக்குநர் ஆ.ரவீந்திரன், விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

உலக வங்கியின் செயற்றிட்டத்தில் 18 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்நிலையம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: