பூநகரி வேரவில் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நூல்கள் வழங்கிவைப்பு!

Saturday, January 21st, 2017

பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட வேரவில் சனசமூக நிலைய ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப் பட்டுள்ளன.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகத்தினரிடம் குறித்த சனசமூக நிலையம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம்  குறித்த சங்கத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

நேற்றையதினம் பூநகரி வேரவில் சனசமூக நிலைய தலைவர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை. தவநாதன் அவர்களால் குறித்த சங்கத்திற்கு புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதன்போது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் இரத்தினம் அமீன் மற்றும் சனசமூக நிலைய பிரதிதிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்..

16145821_1298833753489042_38014589_o

16244594_1298833766822374_630318322_o

Related posts: