நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சை இடம்பெறும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, July 12th, 2023

2023  ஆம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலம், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உயர்தரப் பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, அரச சாரா பல்கலைக்கழகங்களில், பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்து கொள்வதற்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த யோசனை, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால், அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 2022 ஆம் ஆண்டு உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பாடத்திற்கான நடைமுறைப் பரீட்சைகள் இன்று (12) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 42 நிலையங்களில் குறித்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாககவும் இதில் 20 ஆயிரத்து 084 பரீட்சார்த்திகள் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் பரீட்சார்த்திகளுக்கு நடைமுறைப் பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் எனவும் பரீட்சார்த்திகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைப் பரீட்சை மதிப்பீட்டு நிலையத்திற்குச் செல்லுமாறு பிரதி பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: