பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து சுகாதார அமைச்சின் நிலைப்பாடு!

Sunday, July 4th, 2021

மாணவர்கள் 100 க்கும் குறைவான பாடசாலைகளை இம்மாதத்திற்குள் மீண்டும் ஆரம்பிப்பது என்பது அதற்கான வழிகாட்டி ஆலோசனை தயாரிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றல் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே ஆகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற (03) செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது பிரதி சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சில் பாடசாலை சுகாதார பிரிவு உண்டு. இதேபோன்று பொது மக்கள் சுகாதார சேவைகள் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் இருக்கின்றார். இவர்களுடன் கல்வி அமைச்சு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

Related posts: