சிற்பக் கலாநிதி சிவப்­பி­ர­காசம் காலமானார்!

Monday, July 11th, 2016

யாழ்.மத்­திய கல்­லூ­ரியின் முன்னாள் ஆசி­ரி­யரும் யாழ். இரா­ம­நாதன் நுண்கலைத்துறையின் விரி­வு­ரை­யா­ள­ரு­மான சிற்பச் சித்­திர கலா­நிதி கலா­பூ­ஷணம் செல்­லையா சிவப்­பி­ர­காசம் கால­மானார். கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலை­யி­லேயே அவர் நேற்று (10)நேற்றுக் காலை காலமானார்

இலங்­கையில் பிர­சித்­தி­பெற்ற சிற்பச் சித்­திர கலை­ஞ­ரான இவ­ரது சிற்­பங்­களில் ஒன்­றாக யாழ்.முத்­திரைச் சந்­தியில் அமைந்­துள்ள சங்­கி­லியன் சிலை வர­லாற்று முக்­கி­யத்­துவம் கொண்­ட­அமைந்தள்ளது.

அத்துடன் யாழ்.மத்­திய கல்­லூரி நிறு­வு­ன­ரான அதிபர் வண.ஜேம்ஸ் லின்ச்சின் சிலை, வவு­னியா பண்­டா­ர­வன்­னியன் சிலை, அண்­மையில் யாழ்.மணிக்­கூட்டு கோபு­ரத்தைச் சுற்றி நிறுவப்­பட்ட தமிழ் மன்­னர்­களின் சிலை, வவு­னியா நூலக வளா­கத்தில் உள்ள சரஸ்­வதி சிலை, வவு­னியா புகை­யிரத நிலை­யத்தில் உள்ள பெண்ணின் சிற்பம், யாழ். மாநகரசபையில் உள்ள சேர்.பொன்.இரா­ம­நா­தனின் சிலை, வெண்­க­லத்­தினால் செய்யப்பட்ட அல்­பிரட் துரையப்பாவின் சிலை என இரு­பத்­தி­ரெண்­டுக்கும் மேற் ­பட்ட பிரபலங்களின் சிலை­களை அமைத்த பெருமை இவருக்கு உண்டு.

1928.06.21 ஆம் ஆண்டு யாழ்ப்­பாணம் அள­வெட்­டியில் பிறந்தார் செல்­லையா சிவப்­பி­ர­காசம் 1952 ஆம் ஆண்டில் இருந்து 1966 ஆம் ஆண்டு வரை கொழும்பு அர­சினர் நுண்கலைக் கல்­லூ­ரியில் சித்­திரம், சிற்பம் ஆகிய இரண்­டி­னையும் கற்று சித்­திர டிப்ளோமா பட்­டத்­தையும் பெற்­றவர்.பின்னர் யாழ்.மத்­திய கல்­லூ­ரியில் சித்­திர ஆசி­ரி­ய­ராகப் பணியாற்றி­ய­துடன் யாழ்ப்பாணம் பல்­க­லைக்­க­ழகம் சித்­திரப் பாடத்­து­றையை ஆரம்­பித்­த­போது அங்கும் சித்தி­ரப்­பாட விரி­வு­ரை­யா­ள­ராகப் பணி­யாற்­றினார்.

இவர் ஜனா­தி­ப­தியின் தேசிய விருதான கலா­பூ­ஷணம் விருது உட்­பட பன்­னி­ரண்­டுக்கும் மேலான தங்கப்பதக்கங்களைப் பெற்­றி­ருக்­கின்றார். 12 தங்கப் பதக்­கங்­க­ளுக்கு சொந்தக்கா­ர­னான இவர் 1996 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்­க­வினால் சிற்பக் கலா­நிதி பட்டம் பெற்­றவர். மேலும் சிற்­பக்­க­லா­மணி, சிற்பச் சக்­க­ர­வர்த்தி, திருத்தொண்டர் மாமணி, ஆளுநர் விருது, ஜனாதிபதி விருது, ஆகியவற்றை பெற்றவர். கலைஞரது இறுதி கிரியைகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெறும்

Related posts: