யாழ்.மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு தொற்றுறுதி – 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!
Monday, August 30th, 2021
யாழ்.மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் தற்போதுவரை 11 ஆயிரத்து 950 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாமாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது.
இதேவேளை அண்மைய நாட்களில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்ட மக்கள் சுகாதார முறைகளை கடைப்பிடித்து சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 61 ஆயிரத்து 587 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவ...
நாட்டில் இதுவரையில் சுகதார பணிக்குழாமினர் 6,000 பேருக்கு கொவிட்!
அதிகளவான மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது!
|
|
|


