புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் தேவை! – நீதிமன்று

Monday, March 21st, 2016

யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பிரதேசத்தில் இலங்கை பொலிஸ் நிலையம் ஒன்றையோ பொலிஸ் காவலரண் ஒன்றையோ அமைப்பதற்கு பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏம்.எம்.எம்.ரியால் பரிந்துரை செய்துள்ளார்.

பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். புங்குடுதீவு கொலைச்சம்பவம் மற்றும் அங்கு இடம்பெறும் குற்றச் செயல்களை கவனத்தில் கொண்டு நீதவான் இவ்வாறு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: