சுகாதாரத்துறை அதன் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளது – நாட்டை முடக்குமாறு விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் வலியுறுத்து!

Tuesday, August 10th, 2021

நாட்டில் கொரோனா தொற்றின் நிலைமை மிகவும் மோசமடைவதால் மக்களது நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரே வழிமுறையாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதேநேரம் நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு அதிகமாக உள்ளது. அனைத்து எனவும் குறித்த சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் நோயாளிகளின் எண்ணிக்கை கவலைக்கிடமாக உள்ளதுடன், ஒட்சிசன் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கையில் தினசரி அதிவேக உயர்வு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் இது மனநிறைவுக்கான நேரம் இல்லை என்பதால், மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விரைவில் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: