பீடைகளைக் கட்டுப்படுத்த முதல்தடவையாக ட்ரோன் தொழில்நுட்பம்!

Saturday, January 5th, 2019

நாட்டில் முதற்தடவையாக பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம் பரீட்சார்த்த ரீதியில் பயன்படுத்தப்படுகிறது.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்காக ட்ரோன் ஆளில்லா விமானங்கள் மூலம் பீடைநாசினிகள் விசிறப்பட்டன.

இந்தப் பரீட்சார்த்த முயற்சி கலென்பிந்துனுவௌ சோளப் பயிர்ச்செய்கைக் காணியில் இடம்பெற்றது.

விவசாய அமைச்சர் பி. ஹரிசன் வழங்கிய ஆலோசனைக்கு அமைய விவசாயத் திணைக்களம் ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்தி பீடைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியை ஆரம்பித்துள்ளது.

இந்தத் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் பெருமளவில் சோளப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள சேனைகளுக்கும் திட்டத்தை விஸ்தரிப்பதென விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts: