அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உண்டு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023

”அமைச்சரவையை  மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தான் உள்ளது” என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில் –

”சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையில் முதல் கொடுப்பனவு கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்” என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எங்குமே கூறவில்லை.

மேலும் , அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று பலர் சொல்லலாம். யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதி சொன்னால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தான் உண்டு.

ஆகவே, அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமா, இல்லையா என்பது ஜனாதிபதி தான் கூற வேண்டும் என்று அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மருத்துவமனை சார்ந்த சாட்சியங்களை அனைத்து மாகாணங்களிலும் ஒளிப்பதிவு செ...
பகிடிவதை தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்ய சட்டத்திருத்தம் – கல்வி அமைச்சு நடவடிக்கை!
உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸிற்கு எதிராக யாரும் குற்றம் சுமத்த ...