பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விபரங்களை பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: வீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களிடம் அமைச்சரின் வடமாகாண இணைப்பாளர் ஜெகன் கோரிக்கை!

வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களது விபரங்களை அந்தந்த பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்துமாறு உரிய தரப்பினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரியுள்ள நிலையில் குறித்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் அது தொடர்பான விபரங்களை தத்தமது பிரதேச செயலகங்களில் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சரின் வடக்கு மாகாண இணைப்பாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி 65 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக 15ஆயிரம் வீடுகளைக் கட்டும்பணிகள் வரும் மாதம் முதல்வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
எனவே வீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தாம் வாழும் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்படும் விபரங்களை பார்வையிட்டு தத்தமது தெரிவுகளை உறுதிசெய்துகொள்ளுமாறும் அவ்வாறு பெயர்கள் தவறவிடப்பட்டிருப்பின் உரிய தரப்பினருடன் தொடர்புகொண்டு தமது கோரிக்கைகளை சமர்ப’;பித்து கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த 65 ஆயிரம் வீட்டுத் திட்டங்களுக்கும் மேலதிகமாக மேலும் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் மேலும் ஒரு திட்டத்தை இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|