பாண் நிறைகுறைந்தால் உடன் நடவடிக்கை – யாழ்.பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை!

Thursday, November 10th, 2016

நிறைகுறைந்த பாண்களை உற்பத்தி செய்யும் வெதுப்பகங்களுக்கு எதிராக, எதிர்வரும் காலங்களில் கடுமையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரம் வசந்தசேகரம் தெரிவித்துள்ளார்..

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள சில வெதுப்பங்களில் நிறைகுறைந்த பாண் உற்பத்தி செய்யப்படுவதாக, அதிகார சபையின் அலுவலகத்துக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

வெதுப்பக உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை மீறி, தொடர்ந்தும் நிறை குறைந்த பாண் உற்பத்தி செய்யும் வெதுபகங்கள், நீதிமன்ற உத்தரவுக்கமைய சீல் வைத்து முற்றுகையிடப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமம்” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பாக 1 இறாத்தல், பாண் 450 கிராம் நிறையைக் கொண்டிருந்தல் வேண்டும். ஆனால் சில வெதுப்பகங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அவை 420 கிராம் நிறையில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு குறை நிறையுள்ள பாண்களை உற்பத்தி செய்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதை, வெதுப்பக உரிமையாளர்கள் நிறுத்திக்கொள்வது நல்லது. மேலும், இவ்வாறு நிறைகுறைந்த பாண்களை உற்பத்தி செய்யும் வெதுப்பகங்கள் குறித்து, பொதுமக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

முடியுமென்றால், நீங்கள் கொள்வனவு செய்யும் பாணை அளந்து பாருங்கள் என்று தெரிவித்த அவர்,  இது தொடர்பில் 077 588 7825, 077013 9307 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டார்.

bread

Related posts: