பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் படுகாயம்!

Tuesday, January 9th, 2018

கிளிநொச்சி – பளையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

பளை காவல்துறை நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இரவு எட்டு மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்தந்தையான சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் (வயது ௲ 38) என்ற குடும்பஸ்தரே காயமடைந்துள்ளார்.

ஹலோரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் பணியாளரான இவர் தமது பணியை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது நாட்டுதுப்பாக்கி கொண்டு இந்த சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்இதுவரையில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:

சிறுவர் மருத்துவமனை அமைக்க நெதர்லாந்து நிறுவனம் உதவி கோரி பேச்சுக்கள்  - யாழ்.போதனாவின் பணிப்பாளர்!
தீவகத்தின் வீதிகளை காப்பெற் வீதியாக தரமுயர்த்தும் செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்! அமைச்சர் டக்ளஸ...
போதுமான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளன - அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்க...