தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

Sunday, March 20th, 2022

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த வாரம் பாரியளவில் அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் மொத்த விலை, இன்று காலை பாரியளவில் வீழ்ச்சியடைந்து, மரக்கறிகள் விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறிகள் வாங்க வரும் வியாபாரிகள் வருகை தராததும், எரிபொருள் தட்டுப்பாடுமே மரக்கறிகளின் விலை வீழ்ச்சி மற்றும் விற்பனையின்மைக்கு முக்கிய காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகையான மரக்கறிகள் வந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் ஒவ்வொரு மரக்கறியினதும் மொத்த விலை கிலோகிராமுக்கு ரூ.200ஐ தாண்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தின் வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது - காற்று வீசக்கூடும்...
ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் நாட்டின் பொருளாதாரம் - நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் - விஷேட உர...
யாழ் - சென்னை விமான சேவையில் இந்தியாவின் மற்றுமொரு முன்னணி நிறுவனம் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்!