பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும் வாய்ப்பு!
Friday, July 19th, 2019நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய காலநிலை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாடு முழுவதும் குறிப்பாக, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்றையதினமும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பகுதிகளில்அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100-150 மில்லிமீற்றர் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவானபலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
|
|