பயணிகளுக்கு தடுப்பூசிக்கான சான்றிதழ் கட்டாயம் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!
Saturday, August 7th, 2021
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் கட்டயாம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்த நடைமுறை சாத்தியப்படலாம் ஆனால் தற்போது இந்த விடயம் சாத்தியமான விடயமல்ல என்றும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
பரபரப்பாக இயங்கும் குறித்த சேவையின்போது அனைவரிடமும் தடுப்பூசிக்கான சான்றிதழை பரிசோதனை செய்வது எனபது இயலாத காரியம் என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
இரண்டு மணி நேரத்திற்கு ஒரு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொ...
திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது - தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றுக்கு அறிவிப்பு!
உத்தியோகபூர்வ இணையத்தளம் எந்தவொரு இணையப் பரிவர்த்தனைகளுக்கும் உதவவில்லை - தபால் திணைக்களம் அறிவிப்பு...
|
|
|


