பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை அடுத்த மாதம்!

Sunday, July 15th, 2018

2018 ஆம் ஆண்டு க. பொ.த. சா தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை அடுத்த மாதம் இறுதிக்கு முன்னர் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு, மூன்று இலட்சத்து ஐயாயிரத்து 12 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

தற்போது இந்த மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வவுனியா, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மூன்று பிரதேச அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படும் என்றும் ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: