கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!
Tuesday, October 17th, 2023
கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த உச்சி மாநாட்டுடன் இணைந்து மொரோக்கோவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் மீட்சியடைவதன் காரணமாக, ஆயுள் காப்புறுதி நிறுவனங்கள் நிலையான நிலைக்குத் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக Fitch Rating Institute தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்நாட்டிலுள்ள ஆயுள் காப்புறுதி நிறுவனங்கள் அபாய நிலையிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கிளிநொச்சியில் 3389 கடற்றொழிலாளர்கள் பல்வேறு செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர் - பூநகரி கூட்டுறவ...
பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்படும்போது மக்களின் நலன்கள் முன்நிறுத்தப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் ...
சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும் – ஜனாதிபதி!
|
|
|


