இரண்டாம் கட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி கைச்சாத்து!

Sunday, April 18th, 2021

கடற்றொழில் துறையின் மேம்பாட்டிற்காக இலங்கை சமுத்திரவியல் மற்றும் நீர் வேளாண்மைத் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் அமைப்பு (நாரா) மற்றும் நோர்வே அரசின் சமுத்திரவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்குமிடையில் கடந்த 03 வருடங்களாக அமுல்படுத்தப்பட்டு வந்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் 2021. 04. 20ம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு கடற்றொழில் அமைச்சின் 5ம் மாடியிலுள்ள கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.

இலங்கை சமுத்திர்வியல் தொடர்பான தகவல்களை சேகரித்தல், இலங்கையை சூழுவுள்ள கடலில் காணப்படும் மீனகளின் தொகையை மதிப்பீடு செய்தல் மற்றம் கடற்றொழில் நடவடிக்கைகளை முகாமைத்துவப் படுத்தல் ஆகியதுறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதே இவ் ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாகும். 2017ம் ஆண்டுமுதல் 2020ம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலாவது கட்டம் நிறைவடைந்துள்ளதால் இரண்டாம் ;கட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இம்மாதம் 20ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் திருமதிட்ரைன் ஜொரானில் எஸ்கடேல் நோர்வே நாட்டீற்கான இலங்கை தூதுவர் கொட்பிரேகுரே நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்னராஜரா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்துரத்நாயக்க, ஆகியோர் பங்கேற்கவுள்ளளனர்.

இந்நிகழ்வு இலங்கை கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பினை வழங்கும் ஒருநிகழ்வு என்பதாலும் இலங்கை கடற்றொழில் துறையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஊடவியலாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: