பரபரப்பை ஏற்படுத்திய விசைப் படகு!
Monday, March 15th, 2021மீன்பிடி விசைப் படகு ஒன்று யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதனால் கடும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்தியாவின் மீன்பிடித் துறை 08/ எம்.எம்/145 இலக்கம் பொறிக்கப்பட்ட ட்ரோளர் விசைப் படகு ஒன்று நேற்றுக் (14) காலை நெடுந்தீவில் அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கரை ஒதுங்கிய படகு தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மீனவர்களின் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற கடற்படையினர் தமிழக மீனவர்களிற்கு சொந்தமானது எனக் கருதப்படும் படகினை கைப்பற்றி படகில் சோதனையில் ஈடுபட்டனர்.
எனினும் படகில் எவருமே இருக்கவில்லை. இதனையடுத்து கடத்தல் பொருட்கள் ஏதேனும் உள்ளனவா எனவும் தேடுதல் இடம்பெற்றது.
இவ்வாறு யாரும் அற்ற நிலையில் படகு நெடுந்தீவை அடைந்துள்ளதனால் குறித்த படகில் சட்டவிரோதமாக யாராவது ஊடுருவியுள்ளனரா என்பது தொடர்பில் தற்போது ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|