பயிற்சியின் போது அதிபர் உயிரிழந்த விவகாரம் 11 பேருக்கு எதிராக நடவடிக்கை  கல்வி அமைச்சு !

Saturday, March 3rd, 2018

தலமைத்துவ பயிற்சியின் போது பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் அவர்களது பதவியிலிருந்;;து நீக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அதிபர் சேவையின் உத்தியோகத்தர்களுக்கான சுய ஒழுக்கம் மற்றும் தலமைத்துவப் பயிற்சிகளுக்கான  நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றது. அம்பாந்தோட்டை சுச்சி தேசியப் பாடசாலையின் அதிபர் இதன்போது உயிரிழந்தார்.

இது தொடர்பில் பல தரப்புக்களாலும் கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது. தலமைத்துவப் பயிற்சியை தற்காலிகமாக இடைநிறுத்திய  கல்வி அமைச்சர் உயிரிழப்புத் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: