பயணிகள் போக்குவரத்து வடக்கில் இன்று ஆபத்தாக மாறிவிட்டது – மோ.போ ஓய்வு நிலை உதவி ஆணையாளர்!

பயணிகள் சேவைகளில் ஈடுபடுகின்ற சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக கற்றுத் தேறியிருக்க வேண்டும். என யாழ்.மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஓய்வு நிலை உதவி ஆணையாளர் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஆட்டோ வாகன சாரதிகளுக்கான போக்குவரத்து விதிமுறை தொடர்பான முழுமையான பயிற்சிப் பட்டறை அண்மையில் இடம்பெற்றது.
;ஓய்வு நிலை உதவி ஆணையாளர் வ.பத்மநாதன் மேலும் தெரிவிக்கையில்:
சாரதி என்ற தொழிலை பொறுப்பேற்றவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, மனிதநேயம் என்பவற்றிற்கு மேலதிகமாக பயணிகள் பயணிக்கும் வீதியில் எவ்வாறு சாரத்தியம் செய்ய வேண்டும் என்பதனை முதலில் முழுமையாக அறிந்த கொள்ள வேண்டும். கடந்த காலங்களோடு ஒப்பிடுமிடத்து இன்றைய காலங்களில் விபத்துக்கள், இறப்புகள், முறிவுகள் என்பன ஏற்படுகின்றன. இதில் மனித உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. இதன் விளைவுகள் இரு பக்கமும் ஆபத்தானதாக மாறுகின்றது. என தெரிவித்ததுடன் விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றன, விபத்தினை எவ்வாறு தவிர்க்கலாம் என்ற விடயங்களை காணொளி (pழறநச pழiவெ) மூலம் விளக்கினார்.
Related posts:
|
|