கடல் நண்டு பிடிப்பதற்கு தடை!
Saturday, November 5th, 2016
கடல் நண்டு (சிங்கி இறால்) பிடிப்பதை தடை செய்திருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு அறிவித்துள்ளது.
கடல் நண்டின் பெருக்கம் ஒக்டோபர், மற்றும் நவம்பர் மாதங்களிலும் மார்ச் மாதத்திலும் இடம்பெறுவதனால் இக்காலப்பகுதியில் இவற்றை பிடிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டைகளுடன் இவற்றை பிடிக்கும் மீனவர்களை உடனடியாக கைது செய்வதற்கான அறிவுறுத்தல்கள் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:
சமூக நலன்களுக்காக மட்டும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துங்கள் - ரஞ்சித் மத்தும பண்டார!
செயலாளர்கள் தடைகளின்றி கடமைகளை நிறைவேற்ற முடியும் : அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த!
தனியார் துறையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வேண்டும் - கஃபே அமைப்பு!
|
|
|


