பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை அறிமுகம்!

Saturday, April 14th, 2018

போக்குவரத்து சபை – தனியார் பஸ் மற்றும் ரயிம் பயணிகளுக்கு  இலத்திரனியல் அட்டையை நடைமுறையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த டச்  கார்ட்டை பயணிகளினால் கொள்வனவு செய்ய முடிவதுடன் பஸ் அல்லது ரயில்களில் பயணிக்கும் பொழுது பயண கட்டணம் இந்த அட்டையில் குறைத்துக் கொள்ளப்படும்.

போக்குவரத்து ஆணைக்குழுவும் திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் இலங்கை பேய் (Pay) நிறுவனமும் ஒன்றிணைந்து இந்த அட்டையை தயார் செய்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜி.பி.ஹேமசந்திர தெரிவித்தார்.

இந்த கார்ட் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் பயணிகளுக்கு மிகுதி பணத்தi பெற்றுக்கொள்ளும் பிரச்சனையை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும்  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜி.பி.ஹேமசந்திர மேலும் கூறினார்.

Related posts:


குறிகாட்டுவான் துறைக்கு மின்சாரம் வழங்குங்கள் - உள்ளுராட்சி அமைச்சரிடம் நேற்று அப்பகுதி மக்கள் நேரில...
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
பிரதேசசெயலக ரீதியாக தொழிற்சாலைகள் நிறுவி தொழில் வாய்ப்பளிக்கும் முதலீட்டாளருக்கு ஊக்குவிக்க விசேட தி...